முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் 74 சதுர அடி சிறையில் அடைப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      உலகம்
Singapore 2024-10-09

Source: provided

சிங்கப்பூர் : பரிசுகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன், 74 சதுர அடி அளவுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன்(62). மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்த போது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  

இவர் தன், 60-வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இசை நிகழ்ச்சி, கார் பந்தய, கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுடன், மது வகைகள், சைக்கிள் போன்றவற்றையும் பரிசாக வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இதை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இதன்படி, சிங்கப்பூர் சிறை சேவை அதிகாரிகளால் அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவருடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது, 74 சதுர அடி பரப்பளவு உள்ளது. ஒரு பாய், இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறை குடும்பத்தாரை சந்திக்கலாம். மேலும், நான்கு மின்னணு கடிதத்தை அனுப்பலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து