முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டர் தளத்திற்கான தடையை நீக்கியது பிரேசில்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2024      உலகம்
Elon-Musk 2023-10-18

Source: provided

பிரேசிலியா : பிரேசிலில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு டுவிட்டர் வலைதளம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா அதிபராக பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அதே சமயம், சமூக வலைதளமான டுவிட்டர்  தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார் என பிரேசில் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சித்தார். அதோடு, பிரேசிலில் டுவிட்டர் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள டுவிட்டர் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். 

இருப்பினும் பிரேசிலில் டுவிட்டர் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் டுவிட்டர் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் டுவிட்டர்  தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் டுவிட்டர்  தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து, பிரேசில் நாட்டில் டுவிட்டர் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டது.  

இந்நிலையில், பிரேசிலில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு டுவிட்டர் வலைதளம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. பிரேசிலிய சட்டங்களுக்கு இணங்க ஒப்புக்கொண்டு டுவிட்டர் நிறுவனம் 5.1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42 கோடி) அபராதம் செலுத்திய பிறகு தடையை நீக்குவதற்கான முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்துள்ளது. மேலும், பிரேசிலின் டெலிகாம் ரெகுலேட்டரான அனடெல், அதன் 2 கோடி பயனர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவையை மீட்டெடுப்பதை உறுதிசெய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து