முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தூய்மை பணியாளர்களுடன் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மழை, வெள்ள மீட்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். 

மேலும் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து டீக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,

கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து