முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது மகனை தோற்கடிக்க வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் : காங். மீது குமாரசாமி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Kumaraswamy 2023 08 18

Source: provided

பெங்களூரு : சன்னபட்டனா தொகுதி விருப்ப சந்திரா கிராமத்தில் தனது மகனை ஆதரித்து பேசிய எச்.டி.குமாரசாமி,  வேட்பாளர்களை கவருவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டனா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சென்னபட்டனாவில் ஆளும் காங்கிரஸ் சார்பில் யோகேஷ்வர், பா.ஜ.க. கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். 

இந்த நிலையில் சன்னபட்டனா தொகுதி விருப்ப சந்திரா கிராமத்தில் தனது மகனை ஆதரித்து பேசிய எச்.டி. குமாரசாமி சன்னபட்டனா தொகுதியில் வேட்பாளர்களை கவருவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட இதுபோன்ற பரிசு கூப்பன்கள் வழங்கி மக்களை நம்ப வைத்தனர். 

இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் தொண்டர்கள் அத்தகைய பரிசு கூப்பன்களை வழங்கினார்கள். தேர்தல் முடிந்ததும் பணமும் இல்லை. கூப்பனும் செல்லுபடியாகவில்லை. எனவே வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்று குற்றஞ்சாட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து