முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா: மின் உற்பத்தியை முடக்க திட்டமா?

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      உலகம்
Ukraine-2024-11-28

கீவ், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது. நேற்று உக்ரைன் முழுவதும் பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. 

குறிப்பாக மின் உற்பத்தி செய்யக்கூடிய உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ், கார்கிவ், ரிவ்னே, கிமல்நிட்ஸ்கி, லட்ஸ்க் மற்றும் மத்திய, மேற்கு உக்ரைனில் உள்ள நகரங்களில் வெடிகுண்டுகள் வெடித்து பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உக்ரைன் முழுவதும் மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாகவும், இதன் காரணமாக, நாடு முழுவதும் அவசரகால மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தாக்கவும், குளிர் காலத்தில் பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவும் ரஷ்யா ஏவுகணைகளை குவித்து வைத்திருந்தது. வட கொரியா போன்ற அவர்களின்  கூட்டாளிகள் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என உக்ரைன் அதிபர் மாளிகை அதிகாரி அண்ட்ரி யெர்மாக் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குளிர்காலத்திற்கு முன்னதாக நாட்டின் மின் உற்பத்தி திறனை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருக்குமோ? என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து