முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      விளையாட்டு
28-Ram-58-2-

Source: provided

துபாய்: வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்ற நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது.

சுற்றுப்பயணம்.... 

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் 1 முதல் 7 இடங்களுக்குள் அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

9-ம் இடத்திற்கு சரிவு...

ஆனால் கடைசி இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது. அதேவேளை 8-வது இடத்தில் இருந்த வங்காளதேசம் ஒரு இடம் சரிந்து கடைசி இடத்திற்கு (9-வது இடம்) தள்ளப்பட்டுள்ளது.

புதிய புள்ளி பட்டியல்:

1. இந்தியா - 61.11 சதவீதம். 2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம், 3. இலங்கை - 55.56 சதவீதம், 4. நியூசிலாந்து - 54.55 சதவீதம், 5. தென் ஆப்பிரிக்கா - 54.17 சதவீதம், 6. இங்கிலாந்து - 40.79 சதவீதம், 7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம், 8. வெஸ்ட் இண்டீஸ் - 26.67 சதவீதம், 9. வங்காளதேசம் - 25.00 சதவீதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து