முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 பந்துகளில் உர்வில் படேல் சதம்

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      விளையாட்டு
28-Ram-58-1-

Source: provided

சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திரிபுரா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57, ஸ்ரீனிவாஸ் 29 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் அர்சான் நாக்வஸ்வாலா 3, சிந்தன் கஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலின் அதிரடியால் 10.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உர்வில் படேல் 28 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனை படைத்தார் 26 வயதான உர்வில் படேல். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சையது முஸ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், இமாச்சல்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் உர்வில் படேல்.

வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடரும், இதனையடுத்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலி மேத்யூஸ் தலைமையிலான அந்த அணியில் ஸ்டாபானி டெய்லர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:- ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் காம்ப்பெல்லே (துணை கேப்டன்), ஆலியா அலீன், ஷாமிலியா கானல், நெரிசா கிராப்டன், டியாண்ட்ரா டோட்டின் அபி பிளெட்சர், ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, ஜைடா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசார், கரிஷ்மா ராம்ஹராக், ரஷாதா வில்லியம்ஸ்

இலங்கை அபார பந்துவீச்சு

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மார்க்ரம் (9 ரன்), டோனி டி ஜோர்ஜி (4 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (16 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (4 ரன்) வரிசையாக நடையை கட்டினர். 20.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் பவுமா ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. இறுதி கட்டத்தில் கேஷவ் மகராஜ், பவுமா உடன் சிறிது நேரம் நிலைத்து நிற்க அணி கவுரவமான நிலையை எட்டியது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பவுமா 70 ரன்களிலும், கேஷவ் மகராஜ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா & விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இலங்கை முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து