முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் பெரியளவில் வளர்வார்: ஜெய்ஸ்வாலுக்கு டிராவிட் பாராட்டு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      விளையாட்டு
Dravid-2024-06-20

Source: provided

மும்பை: இன்னும் பெரியளவில் வளர்வார் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

ஆஸி., மண்ணில்...

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் அசத்தினர். இதன் காரணமாக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பேட்டிங்கில் ஜொலித்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அறிமுக போட்டியிலேயே அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார்.

அடித்ததில்லை... 

இந்நிலையில் கடினமான ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியிலேயே நிறைய இந்திய வீரர்கள் இப்படி சதம் அடித்ததில்லை என்று அவரை முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். அத்துடன் ஜெயஸ்வால் இன்னும் சிறப்பாக முன்னேறி பெரியளவில் வளர்வார் என்றும் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் தம்முடைய பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடுகிறார். அவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானவர் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. அந்தளவுக்கு அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் விளையாடி நீண்ட காலமாகவில்லை. இப்போதுதான் தொடங்கியுள்ளார்.

முன்னேற்றத்தை... 

ஆஸ்திரேலியாவுக்கு சென்று பெர்த் மைதானத்தில் முதல் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதை செய்ய முடியாது. அவர் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை, ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். எனவே அவர் இனி முன்னேற்றத்தை மட்டுமே சந்திப்பார்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து