முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      உலகம்
Suniita-Williams 202411-29

Source: provided

 

நியூயார்க்: விண்வெளி  நிலையத்தில் இருந்தபடியே தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாடியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம்.

ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது.

இந்நிலையில் விண்வெளி  நிலையத்தில் இருந்தபடியே தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாடியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ் . அமெரிக்காவில் வருடத்தின் விவசாய அறுவடைக்கு  நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் [Thanks giving] நிகழ்ச்சி  கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில்  நேற்று முன்தினம் தேங்க்ஸ் கிவ்விங் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

தேங்க்ஸ் கிவ்விங் விருந்தில் சுனிதா மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள்,  வான்கோழி கறி,  கிரான்பெர்ரி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர், காலான்கள் உணவாக வழங்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி வாக்கில் பூமி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து