முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
Keerthysuresh 2024-11-29

Source: provided

 

சென்னை: அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  

அடுத்து என்னுடைய நடிப்பில் இந்தி படமான பேபி ஜான் திரைக்கு வருகிறது. அடுத்த மாதம் என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தரிசனத்துக்காக திருப்பதிக்கு வந்தேன் என தெரிவித்தார்.

அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது காதலருடன் பின்புறமாக திரும்பியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 15 ஆண்டு கால உறவு. எப்போதும் தொடரும். ஆண்டனி - கீர்த்தி என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது திருமணத்தை அவரே உறுதி செய்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர்.

கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் தொடங்கி தற்போது வரை இருவரும் காதலர்களாக பயணித்து வருகின்றனர். இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில்  டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் நடைபெற உள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து