முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காயம் காரணமாக... 

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியிலிருந்து விலகினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

அணியில் ரோகித்....

ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக முதல் போட்டியில் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் அந்த அளவுக்கு பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ரோஹித் சர்மா அணியில் இல்லாததால், முதல் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதனால், கே.எல்.ராகுல் 3-வது வீரராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

விளையாடுவாரா?

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் ஈடுபட்டு வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து