முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்கதேச அரசு வேடிக்கை பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      இந்தியா
Rss 2024-11-29

Source: provided

 

புது டெல்லி: இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்கதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் மொத்தம் உள்ள 17 கோடி மக்கள் தொகையில், 8 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். அங்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.

அதன் பின்னர் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்கதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வங்கதேசத்தில் இந்துக்கள், பெண்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள், தீ வைப்பு மற்றும் மனிதாபிமானமற்ற கொடுமைகள் மிகவும் கவலையளிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதை கண்டிக்கிறது.

இந்த தாக்குதல்களை தடுப்பதற்கு பதிலாக வங்கதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டது நியாயமற்றது.

இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சின்மய் கிருஷ்ண தாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வங்காளதேச அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

மேலும் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுக்க இந்திய அரசு  தனது முயற்சிகளை தொடர வேண்டும் என்றும், இது தொடர்பான உலகளாவிய கருத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

இந்த நேரத்தில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் வங்காளதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்.  உலக அமைதிக்கும், சகோதரத்துவத்திற்கும் இது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து