முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு வழக்கறிஞர் வந்தனா தகவல்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
A R Rahman 2023-09-11

Source: provided

 

சென்னை: இசையமைப்பாளர் .ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா தெரிவித்துள்ளார்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி அவரை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்திருந்தார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறும் போது, இருவரின் விவாகரத்துக்கு பிறகு பிள்ளைகள், யாருடன் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அவர்கள் வளர்ந்து விட்டதால் முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பிரிவின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்கும் முன் அவர்கள் நிறைய யோசித்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாது என்று ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பிரச்சினையில் ஜீவனாம்சம் குறித்துப் பேசப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்ற வந்தனா ஷா, சாய்ரா பண ஆசை கொண்டவரல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து