முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரா: முக்கிய இலாகாக்களை ஒதுக்கக்கோரி பா.ஜ.க.வுக்கு ஷிண்டே தரப்பு திடீர் நிபந்தனை: வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      இந்தியா
Eknath-Shinde 2023 04 30

மும்பை, முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது.மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், இந்த கூட்டணி 230 இடங்களில் வெற்றியை பெற்றது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவுக்கு 57 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன.

தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளதால், முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்தான் இருக்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருகிறார். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டேவும் முதல் மந்திரி தனக்க்கு வேண்டும் என வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. எனினும், பிரதமர் மோடி, அமித்ஷா எந்த முடிவு எடுத்தாலும் ஏற்க தயார் என்று ஷிண்டே கூறினார். அதேவேளையில் முக்கிய இலாக்காக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால், அங்கு புதிய அரசு அமைவது தள்ளிப்போகிறது. டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஷிண்டே சொந்த கிராமத்துக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியை ஏற்க ஏக்நாத் ஷிண்டே தயங்குவதாக கூறப்படுகிறது. அவரது முடிவு என்ன என்பதும் தெரியவில்லை. துணை முதல்வர் பதவியை அவர் ஏற்காவிட்டால், அந்த பதவி சிவசேனாவின் மற்றொரு தலைவருக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் கூட்டணிகட்சிகளை சரிகட்டி புதிய அரசு அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து