முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு புதிய ஜெர்சி

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

மும்பை : இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாப் 8 அணிகள்...

இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு அடிடாஸ் நிறுவனம் சார்பாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மனப்ரீத் கவுர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் இணைந்து ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 3 மாதங்களில் தொடங்கவுள்ளது. டாப் 8 அணிகள் பங்கேற்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்காக இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.

பேச்சுவார்த்தை... 

இந்தநிலையில் மத்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ  தரப்பில் ஐசிசி-யிடம் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த முடியாது என்று நேரடியாகவே தெரிவித்தது. இதனால் ஐசிசியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. இதற்காக ஐசிசி தரப்பில் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து