முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: மணிகள், வளையல்கள் கண்டெடுப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Vembakkottai 2024-12-04

Source: provided

விருதுநகர் : வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், தங்க மணி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், புதன்கிழமை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டன. முன்னோர்கள் தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ள நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து