முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2024      உலகம்
Elon-Musk 2024-12-07

Source: provided

டெக்ஸ்சாஸ்: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று எலான் மஸ்க்  கூறியுள்ளார்

உலகின் பிரபலமான தொழிலதிபரும், டுவிட்டர்  தள உரிமையாளருமான எலான் மஸ்க்,  தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று ஜோதிடம் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த பதிவில், சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பதாக வெளியான தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க்  மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப் போகின்றன என பதிவிட்டிருந்தார்.

 இந்நிலையில் எலான் மஸ்க் கூறியிருக்கும் இந்த தகவல், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக மரியோ நாவ்பால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது. 

கடந்த 2023-ம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு 0.97 ஆக குறைந்துள்ளது. இது 1.0-க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும். 

அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது. இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் மிக அதிகம் இருப்பர்.

தொழிலாளர்கள் வீதம் குறைவாக இருக்கும், மனித வளம் குறைந்துவிடும்.  தொழிற்சாலை முதல் உணவு வினியோகம் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்று மரியோ நாவ்பால் பதிவிட்டிருந்தார்.  

ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெறும் வயதான 25 -34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல் இருப்பதால், 20 வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து