முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்ட திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேறியது. இதன்மூலம் தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் நடந்து வரும் கூட்டத்தொடரிலும் தாக்கம் ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.

இதனிடையே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் சட்டசபையில் நிறைவேறிய மசோதா, கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து