முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பாரதிய ஜனதா அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து : துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது ஒரு நாள் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்நிலையில் தி.மு.க. சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க. சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது திமுக சட்டத்துறை. 

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மேலும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்டியா கூட்டணி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை தி.மு.க. சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து