முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

Mr.ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2025      சினிமா
Mr -Housekeeping-Review 202

Source: provided

பொறியியல் கல்லூரி மாணவரான நாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், லாஸ்லியாவை காதலிப்பதாக சொல்ல, லாஸ்லியா நிராகரித்து விடுகிறார். படிப்பு முடிந்து 1 ஆண்டுக்கு பிறகு லாஸ்லியாவின் வீடுதான் என்று தெரியாமல் அவரது வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிராக  வேலைக்கு போகிறார். அப்போது இருவருக்குமிடையே நெருங்கிய நட்பு உருவாகிறது. இந்த நட்பை காதல் என்று புரிந்துக் கொள்கிறார் ஹரி பாஸ்கர், இந்நிலையில், லாஸ்லியா வேறு ஒருவரை காதலிப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சியடையும் ஹரி பாஸ்கர், லாஸ்லியாவுக்கு தொடர்ந்து காதல் தொல்லைக் கொடுக்க, இறுதியில் யாருடைய காதல் வெற்றி பெற்றது என்பதே மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங் படத்தின் கதை. ஹரி பாஸ்கர், ஜாலியாக வலம் வரும் இளைஞராக அழகாக நடித்திருக்கிறார். நாயகி லாஸ்லியா, நடிப்பிலும், அழகிலும் பிரகாசிக்கிறார். ரயான், சாரா, இளவரசு, ஆகியோர் கொடுத்த வேலேயை கச்சிதமாக செய்துள்ளனர். ஓசோ வெங்கட்டின் இசை படத்துக்கு பெரிதும் துணை நிக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் அருண் ரவிச்சந்திரன், தற்போதைய தலை முறையினர் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், என்பதை ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த அம்சங்கள் தான் என்றாலும், படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றதற்காக அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரனைப் பாராட்டலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து