முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டிகர் மேயர் தேர்தல்: 2 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      அரசியல்
BJP 2023-11-05

சண்டிகர், சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா, 19 வாக்குகளை பெற்று 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்றார்.

35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 16 கவுன்சிலர்கள் உள்ளனர். மேலும், மாநகராட்சியின் அலுவல் ரீதியான உறுப்பினர் என்ற அடிப்படையில் சண்டிகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரிக்கும் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இத்தகைய சூழலில், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், சிலர் மாற்றி வாக்களித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

மேயர் தேர்தலுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜெய்ஸ்ரீ தாக்கூரை தேர்தல் பார்வையாளராக சுப்ரீம் கோர்ட்டு நியமித்திருந்தது. மேயர் தேர்தலை தொடர்ந்து அடுத்ததாக மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து