முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அபார வெற்றி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

காலே : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜோஷ் இங்லிஷ்... 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும், ஜோஷ் இங்லிஷ் 102 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

165 ரன்களுக்கு...

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தினேஷ் சண்டிமால் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 22 ரன்களும், குசல் மெண்டிஸ் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மேட் குன்ஹிமேன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அபார வெற்றி...

165 ரன்களுக்கு ஆட்டமிழந்து  பாலோ ஆன் ஆன இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்களும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 39 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டநாயகன்...

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் மற்றும் மேட் குன்ஹிமேன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் டோட் முர்பி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து