முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசைத்துறையின் உயரிய விருது: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இந்தாண்டிற்கான கிராமி விருது

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      உலகம்
Chandrika-Tan-Tan

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.2) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் ( பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம்) எனும் பிரிவில் அவரது ’த்ரிவேணி’ இசை ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த ‘த்ரிவேணி’ இசை ஆல்பம் பல்வேறு முன்னனி இசைக்கலைஞர்களுடன் இந்தப் பிரிவில் போட்டியிட்டு வென்றுள்ளது.

முன்னதாக, சென்னையில் வளர்ந்த சந்திரிகா மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவில் குடியேறி அங்கு தொழிலதிபராக உயர்ந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் வெளியிட்ட ’சோல் கால்’ இசை ஆல்பம் அந்தாண்டின் கிராமி விருதுகளில் இதேப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து