முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வசந்த பஞ்சமி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      இந்தியா
Tarpanam 2023 07-17

Source: provided

உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கி வருகிறது 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர். கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு மகா கும்பமேளா பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவில் இந்தாண்டு 6 நாள்கள் விஷேசமாகக் கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் வசந்த பஞ்சமி.

வசந்த பஞ்சமி நேற்று கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகின்றது. முக்கியமாக கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி மூன்றும் பிரசித்தி பெற்றவை. இதில் தை அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாகக் கொண்டாடுகிறது. வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி, நேற்று காலை 8 மணி வரையில் சுமார் 62,25,000 பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டது. சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்ட நிலையில் புனித நீராடிய பக்தர்களை மேலும் மகிழ்வித்தது. பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து