முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாக். சென்றது ஆஸ்திரேலிய அணி

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      விளையாட்டு
Australia 2024-02-06

Source: provided

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான்  சென்றடைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை  (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் சென்றது...

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சென்றடைந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் பதிவிட்டிருப்பதாவது: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துகொள்வதற்கான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வந்தடைந்தது. அவர்கள் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடாபி மைதானத்தில் அவர்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

முதல் போட்டி இங்கிலாந்துடன்...

இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து