முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை தொடரில் இருந்து நெய்மர் விலகல்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Neymar 2025-03-15

Source: provided

பியூனஸ் அயர்ஸ் : கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் ஆர்ஜென்டீனாவுடனான பிரேசில் போட்டியிலிருந்து நெய்மர் விலகியுள்ளார்.

கால்பந்து இளவரசன்... 

சமீபத்தில் 17 மாதங்களுக்குப் பின் முன்னாள் கேப்டன் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர். சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.

விலகல்...

இந்நிலையில் கடந்த வாரம் சன்டோஷ் போட்டியில் நெய்மர் விளையாடவில்லை. இடது தொடையில் காயமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் என்ட்ரிக் நெய்மருக்கு பதிலாக விளையாடவுள்ளார். தென்னமரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில் கொலம்பியாவை மார்ச்.20ஆம் தேதி சந்திக்கிறது. அடுத்த 5 நாள்களில் ஆர்ஜென்டீனாவை சந்திக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து