முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

க.மு க.பி விமர்சனம்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      சினிமா
K M -K P -Review 2025-04-07

Source: provided

காதலர்கள், திருமணத்துக்கு பிறகு சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியாமல் விவாகரத்துக்கு சொல்லும் நிலையைச் சொல்லும் படம் தான் க.மு - க.பி. ஐடி துறையில் பணியாற்றும் விக்னேஷ் ரவியும், சரண்யா ரவிச்சந்திரனும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். விக்னேஷ் ரவி சினிமா ஆசையால் வேலையை விட்டுவிட்டு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது விருப்பத்தை புரிந்துக் கொள்ளும் மனைவி சரண்யா அவருக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கிறார்.  முதலில் பாராட்டும்படி இல்லற வாழ்க்கையை தொடங்கும் இவர்கள், பின்னர் சிறு சிறு விசயங்களில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்கிறார்கள். அவர்களது முடிவு அவர்களை நிரந்தரமாக பிரித்ததா அல்லது மீண்டும் ஒன்றிணைய வழிவகுத்ததா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ’க.மு - க.பி’. விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் இருவரும் இப்படம் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்கள். நிரஞ்சன், அபிராமி முருகேசன், டி.எஸ்.கே, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். தர்ஷன் ரவி குமாரின் இசையில், ஜெகன் கவிராஜின் வரிகளில்  இறவியே என்ற பாடல் அருமை, காதலி மீது காட்டும் அக்கறையை மனைவி மீது காட்டாமல் போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம். மொத்தத்தில், கமு-கபி யை ஒரு முறை பார்க்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து