எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, காஷ்மீர் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:- பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இரு முறை பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். இல்லையெனில் ட்ரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம். இவ்வாறு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து நேற்றுமுன்தினம் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன.
இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் அனைத்து ஏவுகணைகளையும் எங்களால் இடைமறித்து அழிக்க முடியும். ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையை மட்டும் எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். பிரம்மோஸை எங்களால் இடைமறித்து அழிக்க முடியாது என்று தெரிவித்தன. இந்த சூழலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ராணுவ தளபதி ஸ்ரீநகர் பயணம்: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி நேற்று காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு செல்கிறார். அங்கு ராணுவ மூத்த தளபதிகளுடன் அவர் முக்க்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பஹல்காம் தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கும் சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவிவேதியின் ஸ்ரீநகர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு
23 Jun 2025புதுடெல்லி : ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.
-
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது சென்னை போலீசார் நடவடிக்கை
23 Jun 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு
23 Jun 2025சென்னை, தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு நிலவியது.
-
வால்பாறைக்கு இடைத்தேர்தலா ? தேர்தல் ஆணையம் விளக்கம்
23 Jun 2025சென்னை, வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
23 Jun 2025மாஸ்கோ : இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதினை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.
-
ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் இந்தியர்கள் 160 பேர் மீட்பு
23 Jun 2025ஜெருசலேம், 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் முறைகேடு புகாரில் வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கைது
23 Jun 2025டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
-
9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
23 Jun 2025சென்னை, தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
23 Jun 2025திருட்டு தொழில் செய்யும் நாயகன் வைபவ் மற்றும் அவரது நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2 கோடி பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார்.
-
புதுச்சேரி அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
23 Jun 2025புதுக்கோட்டை : புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.
-
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
23 Jun 2025அமராவதி, கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டி.என்.ஏ. திரை விமர்சனம்
23 Jun 2025அதர்வா மனைவி நிமிஷா சஜயனுக்கு பிறக்கும் குழந்தை சில நிமிடங்களில் மாற்றப்பட்டு கடத்தப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை கடத்தப்படவில்லை என்கிறது.
-
தரையிறங்கும் முயற்சி தோல்வி: ஸ்ரீநகர் புறப்பட்ட விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது
23 Jun 2025டெல்லி : ஸ்ரீநகர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் இடைவிடாது ஒலித்த சைரன்
23 Jun 2025டெல் அவிவ், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
23 Jun 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
23 Jun 2025தெஹ்ரான், ஐ.நா.
-
ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
23 Jun 2025சென்னை, நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடுகளும்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு தாக்கல்
23 Jun 2025சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க
-
4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: குஜராத், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி வெற்றி
23 Jun 2025புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
-
விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ்
23 Jun 2025அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திர
-
தாக்குதல் திட்டம் எதிரொலி: அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
23 Jun 2025ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
-
குபேரா திரை விமர்சனம்
23 Jun 2025அரசின் ஒரு திட்டத்தை அபகரிக்க நினைக்கும் தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லஞ்சமாக கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிக்கிறார்.
-
ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பால் மேலும் பதற்றம்
23 Jun 2025மாஸ்கோ : ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
ஈரானில் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல்: 15 போர் விமானங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
23 Jun 2025டெல் அவிவ் : ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இதுவரை 950 பேர் உயிரிழப்பு
23 Jun 2025டெஹ்ரான் : ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று (ஜூன் 23) வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்