முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில் இருந்த சிரமங்களை நீக்கி பட்டா வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், ஓராண்டுக்குள் 1.38 இலட்சம் பட்டாக்களை நம் திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (நேற்று), திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் கத்திவாக்கத்தைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வாழ்த்தினோம்.

இந்த நிகழ்ச்சியில், வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்துக்கு நிலம் கொடுத்ததற்காக மாற்று இடம் பெற்ற 400 பயனாளிகளுக்கும் அவர்களுக்கான பட்டாக்களை வழங்கினோம். உண்ண உணவு - உடுத்த உடை - இந்த வரிசையில் 'இருக்க இடம்' எனும் அடிப்படைத் தேவையை மட்டுமின்றி, அந்த இடத்துக்கான மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நம்முடைய கழக அரசு நிலைநாட்டி வருகிறது. மேலும், அப்பகுதி மக்களுக்காக 18 ஆயிரம் பட்டாக்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவற்றையும் வழங்கிடுவோம் என்று உறுதியளித்தோம். பட்டாக்களை பெற்ற கத்திவாக்கம் பகுதி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும். என தெரிவித்துள்ளார் . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து