முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காலை 11.30 மணியளவிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று 1.30 மணியளவிலும் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதேநேரத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்ச்சி சதவீதம் 88.39 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 0.41 சதவீதம் அதாவது சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

10 ஆம் வகுப்புத் தேர்வு 26,675 ஒருங்கிணைந்த பள்ளிகளில் 7,837 மையங்களில் நடத்தப்பட்ட நிலையில் 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த ஆண்டு வாரிய தேர்வுகள் எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்தைத் தாண்டியது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைந்தன.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சி.பி.எஸ்.இ.10,12ம் வகுப்பு தேர்வெழுதிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் உறுதிப்பாடு, ஒழுக்கம், கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்களிப்புகளையும் அவர் பாராட்டினார், மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த சாதனைக்குப் பங்களித்த அனைவரின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒருநாள். மாணவர்கள் இனி வரவிருக்கும் அனைத்து தேர்வுகளிலும் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துகிறேன். அதேசமயம் தேர்வுகளில் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரையைக் கூறியுள்ளார்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களால் மனச்சோர்வடைந்தவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு தேர்வு முடிவால் உங்களை ஒருபோதும் வரையறுக்க முடியாது. உங்கள் பயணம் மிகப்பெரியது. உங்களின் பலம் மதிப்பெண் பட்டியலைத் தாண்டி செல்லக்கூடியது. நம்பிக்கையுடன் இருங்கள், ஆர்வமாக இருங்கள், ஏனென்றால் பெரிய விஷயங்கள் காத்திருக்கின்றன என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து