முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 69,000-க்கும் கீழ் சரிவு

வியாழக்கிழமை, 15 மே 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனையானது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வருகிறது.

அந்த வகையில், சென்​னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மே 13-ம் தேதி காலை, மாலை என அடுத்​தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது.

தொடர்ந்து நேற்று முன்தினம் (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆக விற்பனையானது. இந்நிலையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனையானது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து