முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகாடு மோதல் சம்பவம்: ஐ.ஜி, ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 15 மே 2025      தமிழகம்
Cort 2023 04 17

மதுரை, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐ.ஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராக அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதிப்படுத்தவும், சி.சி.டிவி. காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யவும், திருச்சி ஐ.ஜி., புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

 இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டையில் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது.  நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அந்த இடத்துக்குள் இரு தரப்பினரும் செல்லக் கூடாது. பேனர் வைக்கக் கூடாது.கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து