முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 மாநிலங்களில் 'ஜெய் ஹிந்த் சபா' கூட்டம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
congress-office

Source: provided

புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்  துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் மூண்டது.  இதனிடையே அமெரிக்கா தலையிட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது புகார் கூறத் தொடங்கியுள்ளன.

இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’எனும் பெயரில் கூட்டங்களை நடத்த இருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 20 முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இக்கூட்டங்களில், மத்திய அரசு தேசிய பாதுகாப்பை கையாள்வது குறித்தும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்தும் கேள்விகளை எழுப்ப உள்ளது.

மே 20 முதல் 30 வரை நடைபெற இருக்கும் இக்கூட்டங்கள் 15 மாநிலங்களின் முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி, சிம்லா, ஹல்துவானி, பாட்னா, ஜபல்பூர், புனே, கோவா, பெங்களூரு, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பின்பு பாஜக சார்பிலும் நாடு முழுவதிலும் மூவர்ண கொடி யாத்திரைகள் நடைபெற்றன. இதற்கு எதிராக காங்கிரஸ் இந்த ‘ஜெய் ஹிந்த் சபா’-க்களை நடத்துவதாகக் கருதப்படுகிறது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து