முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 19 மே 2025      சினிமா
DD-Next-Level 2025-05-19

Source: provided

யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் அந்த திரையரங்கத்திற்கு செல்ல, அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். 

சைக்கோ கிரைம் திரில்லர் மற்றும் திகில் ஜானர் திரைப்படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்ளும் சந்தானம், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார், என்பதை வழக்கமான பாணியிலும், சற்று குழப்பாமான பாணியிலும் சொல்வதே ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படம்.

கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் போன்றவர்களின் கதாபாத்திரம் படத்துடன் பயணித்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இருக்கிறது.முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் திகில் நகைச்சுவை என்று நம்மை அழைத்துச் செல்கிறார்.  திரை விமர்சகர்களை கேள்வி கேட்டு, கலாய்த்திருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், இறுதியில் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நல்ல படம் ஓடும், என்று பதில் அளித்திருக்கிறார். அந்த பதில் அவருக்கும் பொருந்தும். மொத்தத்தில், ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ வேற லெவல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து