முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
KL-Rahul 2023-08-29

Source: provided

மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 

63-வது லீக் போட்டி... 

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

முன்னேற்றம்...

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது.

விராட் கோலி முதலிடம்...

இப்போட்டியில் கே.எல்.ராகுல் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 504 ரன்கள் அடித்துள்ளார். 8 முறை ஐ.பி.எல். தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து