முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தகம் முதல் சுற்றுலா வரை வடகிழக்கு மாநிலங்கள் பன்முகத்தன்மை கொண்டவை: பிரதமர் மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Modi 2023 07 30

புதுடெல்லி, வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ரைசிங் வடகிழக்கு உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது இந்தியா உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடு என்று அழைக்கப்படுகிறது. நமது வடகிழக்கு மாநிலங்கள் இந்த நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, அதன் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலம் வடகிழக்கு என்றால், உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு மற்றும் திறன், சுற்றுச்சூழல் சுற்றுலா, கரிமப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பெயர் போன பகுதி. அதோடு, வடகிழக்கு என்றால் ஆற்றல் மையம். அதனால்தான் வடகிழக்கு நமது அஷ்டலட்சுமிகள். அஷ்டலட்சுமியின் ஆசியுடன், வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் “நாங்கள் முதலீட்டிற்குத் தயாராக இருக்கிறோம், நாங்கள் தலைமைத்துவத்திற்குத் தயாராக இருக்கிறோம்.” என்று கூறுகிறது.

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு, கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும் வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த கிழக்கு என்பது ஒரு திசையை மட்டும் குறிக்காது. எங்களுக்கு, இதன் பொருள் அதிகாரமளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றுதல் என்பதாகும். இது கிழக்கு இந்தியாவிற்கான எங்கள் அரசாங்கத்தின் கொள்கை.” என தெரிவித்தார். 

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரைசிங் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு, மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறும். இந்த உச்சிமாநாடு வடகிழக்கு பிராந்தியத்தை வாய்ப்புகளின் பூமியாக முன்னிலைப்படுத்துவதையும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து