முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு 1 பில்லியன் டாலர் ஏன்? சர்வதேச நாணய நிதியம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      இந்தியா
Pakis

புதுடெல்லி,  பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.

இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம்  நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.எம்.எப்.-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், "பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி வழங்கும் திட்டத்தை அங்கீகரித்தது. 

இதற்கான முதல் மதிப்பாய்வு 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டது. மேலும் அந்தக் காலக்கெடுவுக்கு இணங்க, மார்ச் 25, 2025 அன்று, ஐ.எம்.எப். ஊழியர்களும், பாகிஸ்தான் அதிகாரிகளும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான முதல் மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டினர். அது அந்த ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தம், பின்னர் எங்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது மே 9 அன்று மதிப்பாய்வை நிறைவு செய்தது. இதன் காரணமாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் நிதியை பெற்றது" என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தால் செப்டம்பர் 2024 இல் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் சுமார் 2.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து