முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணர்ச்சிவசப்படுகிறார்: எலான் மஸ்க் மீது ஜே.டி.வான்ஸ் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      உலகம்
UAS-1 2025-04-21

Source: provided

வாஷிங்டன் : எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்து விட்டார்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே உள்ள மோதல் குறித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: எலான் மஸ்க் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். அதிபர் டிரம்ப் குறித்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு.

அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகள். தற்போது எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். எலான் மஸ்க் மீண்டும் டிரம்புடன் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். எலான் மஸ்க் எதிர்க்கும் மசோதா செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. இது ஒரு நல்ல மசோதா ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலான் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது. அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எலான் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியக் காரத்தனமானது. அதிபர் டிரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். இவ்வாறு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து