முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாஅறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் : ஒடிசா அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
virus

Source: provided

புவனேஸ்வர் : கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அச்சுறுத்திவந்த கொரோனாபாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், கொரோனாபாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றது. நாட்டில் கொரோனா பாதிப்பு இதுவரை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஒடிசாவில் 15 பேர் தொற்றியிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் 34 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

புரி ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை திருவிழா ஜூன் 27ஆம் தேதி முதல் நிகழவுள்ள நிலையில், ரத யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு வருவதாகவும் அதேசமயம் கொரோனாஅறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஜூன் 20 முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளதால் , கொரோனாதடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க பள்ளிகள் செயல்படும் என்று கல்வி அமைச்சர் நித்யானந்தா கோண்ட் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து