முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா: கேரளத்தில் உயரும் பாதிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

புதுடில்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய கொரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடமாநிலங்களான தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாந பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,957 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த 624 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கொரோனாவின் புதிய மாறுபாடான ஜெஎன்1 வைரஸ் நாட்டில் பரவலாகப் பரவி வருகின்றது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது. இந்த பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், மருத்துவமனைகளிலும், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து