முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவுக்குள் நுழைய முயன்ற கிரெட்டா தன்பெர்க் கைது

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      உலகம்
Gaza 2025-06-09

Source: provided

ஜெருசலேம் : கடல் வழியாக கப்பலில் காசாவுக்குள் நுழைய முயன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்  கிரெட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க். இவர் பிரீடம் புளோட்டிலா மேட்லீன் என்ற பாலஸ்தீன ஆதரவு தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதாக அறிவித்தார். அதன்படி, அந்த கப்பலில் கிரெட்டா தன்பெர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேர் பயணித்தனர்.

இத்தாலியின் சிஸ்லி தீவில் இருந்து காசா நோக்கி புறப்பட்ட அந்த கப்பல் இன்று அதிகாலை இஸ்ரேல் கடற்பகுதி அருகே சென்றபோது இஸ்ரேல் அதிரடிப்படையினர் அதை இடைமறித்தனர். கப்பலுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதில் இருந்த கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரையும் கைது செய்தனர். விளம்பரத்திற்காக கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரும் இந்த செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியை இஸ்ரேல் வெளியுறவுத்துறை, கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து