முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98.5 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்: அமித்ஷாவுக்கு ஆ.ராசா பதிலடி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்      அரசியல்
raja

சென்னை, 98.5 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

தி.மு.க. எம்.பி ஆ.ராசா நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - டெல்லி, மராட்டியம், அரியானா போல தமிழ்நாடு கிடையாது. தமிழ்நாடு திராவிட சித்தாந்த பின்னணி கொண்ட மாநிலம். இங்கு பா.ஜ.க.வால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதை அமித்ஷா விரும்பவில்லை. சட்டம் , ஒழுங்கு தமிழகத்தில் அமைதியாக உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்காதபோது, மாநில அரசு நிதியில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் தனது பதவிக்கு உகந்தவாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். 98.5 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அமித்ஷாவை நான் அழைக்கிறேன். விவாதத்திற்கு நான் தயார்? அமித்ஷா தயாரா? தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதை அமித்ஷா விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் நுழைய முடியாது. எப்படிப்பட்ட கூட்டணி அமைத்தாலும் அதனை தி.மு.க. கூட்டணி வெல்லும். பா.ஜ.க.வின் எந்தவித மத அரசியலும் பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தி.மு.க.விற்கு அச்சப்பட்டுதான், தமிழ்நாட்டுக்கு வந்து அமித்ஷா பேசியுள்ளார். தி.மு.க.வை கண்டு பா.ஜ.க.தான் அஞ்சுகிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து