முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
mumbai-train

மும்பை, மும்பை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மராட்டிய தலைநகர் மும்பையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருவிழா கூட்டம் போல ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு காணப்படும்.

இந்த நிலையில், நேற்று காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. அதிக கூட்டம் காரணமாக ரயிலில் படிக்கட்டுகளில் அதிகளவிலான பயணிகள் தொங்கியபடி பயணித்துள்ளனர். தானேவை அடுத்த மும்ப்ரா ரயில் நிலையம் அருகே புறநகர் ரயில் சென்றுகொண்டிருந்த போது, படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்துள்ளனர்.அதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காயமடைந்தவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக மும்பை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தானே - மும்பை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து