முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல்வர் சித்தராமையா தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்தர​விடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்​தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதி​வாரி மக்கள் தொகை கணக்​கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்டப்பட்டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்பட்டு, அதனை ஏற்றதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு ஒக்​கலிகா, லிங்காயத்து போன்ற சாதிகள் எதிர்ப்பு தெரிவித்த​தால், அதன் விவரங்​கள் வெளியிடப்படவில்​லை.

இந்நிலையில் கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்\​களிடம் கூறியதாவது:- 

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்ட பிரிவு 11 (1)ன்​படி ஒவ்​வொரு 10 ஆண்​டுகளுக்கும் சாதிவாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த கணக்​கெடுப்பு இப்​போது காலா​வ​தி​யாகி​விட்​டது. அந்த அறிக்​கைக்கு பல்​வேறு தரப்​பினரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பிற்​படுத்​தப்​பட்​டோர் பிரி​வில் உள்ள சில சாதி​யினர் புதி​தாக சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என கோரினர். அதனை ஏற்று மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த புதி​தாக உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து காங்​கிரஸ் தேசிய‌ தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தினேன். அவர்​களின் வழி​காட்​டு​தலின்​படி சாதி​வாரி கணக்​கெடுப்பை மேற்​கொள்ள இருக்​கிறோம். எங்​களின் தரவு​களை மத்​திய அரசு ஏற்க வேண்​டும் என்பதே கர்​நாடக அரசின் நிலைப்​பாடு. புதி​தாக இந்த கணக்​கெடுப்பை மேற்​கொள்ள 80 நாட்​கள் வரை ஆகும் என நிபுணர்​கள் கூறி​யுள்​ளனர். இவ்வாறு சித்த​ராமையா தெரிவித்தார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து