முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறும்: திருமாவளவன்

புதன்கிழமை, 18 ஜூன் 2025      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

Source: provided

சென்னை : தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். நான் இடையூறாக இருக்க மாட்டேன் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள்.

முதலில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், குடிசைகளை கொளுத்தினார்கள். எத்தனையோ பிரச்னைகள் நடந்தது. அது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாம் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் என ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினார். ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்திய, தலித் அல்லாத முதல் தலைவர் ராமதாஸ்.  நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினார்.

அம்பேத்கருக்கு சிலைகளை நிறுவினார். தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான் பா.ம.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக இருப்பார். முதல் முறையாக, இரண்டு தலித் சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சர் ஆக்கினார். இது எல்லாம் அந்த காலத்தில் சரி. இரண்டு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அளப்பறிய முயற்சி. வரலாற்றில் என்றைக்கும் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒன்று.

அதற்கு முன்னாள் நடந்த வன்முறையை விடுங்கள். அந்த வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய ஒரு செயல்திட்டமாக இது எல்லாம் இருந்தது. அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமா, இல்லையா? சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டுமா, இல்லையா? நான் எப்படி உங்களுக்கு எதிரியாக இருக்க முடியும்? நான் எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பேசி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், திருமாவளவன் என்ன நினைத்து கொள்வார் என ராமதாசுக்கு சங்கடம் இருப்பதாக பேசப்படுகிறது என கேள்வி எழுப்பட்டது. இதற்கு திருமாவளவன் அளித்த பதில்: நான் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் யாருக்கும் நெருக்கடி தர மாட்டேன். நிர்பந்தம் தரமாட்டேன். அது அவர்கள் எடுக்கிற முடிவுகள். தி.மு.க.,வுக்கும், பா.ம.க.,வுக்கும் இடையே அப்படி ஒரு நல்லிணக்கம் இருந்து, அப்படி ஒரு முடிவு எடுத்தால் நான் தலையிட மாட்டேன். நாங்கள் வெளியேறுவோம். நாங்கள் தனியாக நிற்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து