Idhayam Matrimony

இஸ்ரேல்-ஈரான் இடையே நீடிக்கும் மோதல்: ஜெருசலேமில் தூதரகத்தை 3 நாள் மூடியது அமெரிக்கா

புதன்கிழமை, 18 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-15

Source: provided

ஜெருசலேம் : இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்ததால், ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூன்று நாட்களுக்கு மூடியது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. ராணுவ தளங்கள் தொடங்கி, பல முக்கிய உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்குள், ஈரான், இஸ்ரேலை நோக்கி குறைந்தது 30 ஏவுகணைகளை ஏவி, டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளைத் தாக்கியது. இந்தத் தாக்குதலின் விளைவாக கடலோர, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பல தீ விபத்துகள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூன்று நாட்களுக்கு மூடியது. ஏற்கனவே டெல் அவில் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இதற்கிடையே, அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், மோதல், மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து