முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      உலகம்
Jelensky 2023 06 27

Source: provided

உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்க உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்தது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 142 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட ரஷ்யாவுக்கு உலக நாடுகள் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதல் ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையை தேர்வு செய்கிறது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்துகிறது" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரின் உண்மையான இழப்பை உணர ரஷ்யாவு்ககு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய ஆதரவு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து