முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்க தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷ்யா

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      உலகம்
Putin 2023 07-14

Source: provided

மாஸ்கோ : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.

இந்நிலையில் மாஸ்கோவில்  நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம். இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.

முன்னதாக, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார். மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷ்யாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து