முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வரும் 1-ம் தேதி யாகசாலை பூஜை

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-06-23

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், வரும் 1-ம்தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்தட்ட வளாக பணிகளும், ரூ.100 கோடியில் அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகளும் நடந்து வருகிறது. இதில் திருப்பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. ராஜகோபுரம் கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கோவில் உள்புறம் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் விமான கலசங்களில் தங்கத்தகடு பதிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லப விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் யாகவேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், கண்காணிப்பாளர்கள் விஜயலட்சுமி, அஜித் மற்றும் திரிசுதந்திரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வருகிற 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதற்கிடையில் கலெக்டர் இளம்பகவத் திருச்செந்தூர் வருகை தந்தார். தொடர்ந்து அவர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து