முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      சினிமா
Srikanth

சென்னை, போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளு படி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து